இலங்கையில் ஒருவர் ஆண்டுக்கு கிலோ 12 பிளாஸ்டிக் பயன்படுத்துகின்றனர்
ஒரு இலங்கையர் வருடத்திற்கு சுமார் கிலோ 12 பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துகிறார் என சுற்றாடல்துறை பிரதி அமைச்சர் என்டன் ஜயகொடி தெரிவித்துள்ளார்.
இன்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் டாக்டர் தம்மிக பட்டபெந்தி மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஜூன் 5ஆம் திகதி, கேகாலை நகரத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் தேசிய நிகழ்வு இடம்பெற உள்ளது.
இந்த நிகழ்வில் “கேகாலை பிரகடனம்” என்ற சுற்றுச்சூழல் அறிக்கையை ஜனாதிபதி வழங்குவார்.
வருடத்திற்கு சுமார் 250,000 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவு இலங்கையில் உருவாகின்றது. அதில் 10% மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது.
எஞ்சிய பிளாஸ்டிக் கழிவுகள் மணல் மேடுகள், கடற்கரை, காட்டுப் பகுதியில் குவிக்கப்படுகின்றன.
“பிளாஸ்டிக் கழிவுகளில் 73% வரை மட்டுமே சேகரிக்கப்படுகிறது. சேகரித்த பிறகு கூட, அதன் பெரும்பகுதி குப்பைமுகடுகளாக மட்டுமே முடிகின்றது.” என தெரிவிக்கப்படுகின்றது.





ஒருபுறம் கிம் - ட்ரம்ப் சந்திப்பு... மறுபுறம் வடகொரியாவில் ஊடுருவிய அமெரிக்க சிறப்புப்படை: திகில் பின்னணி News Lankasri

மண்டபத்தில் சக்தி செய்த பிரச்சனை, ஜீவானந்தம் கேட்ட கேள்வி, குழப்பத்தில் ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
