மன்னார் கடற்கரையோரங்களில் கரை ஒதுங்கியுள்ள ஆபத்தான பிளாஸ்டிக் பொருட்கள்
மன்னார் மாவட்டத்தில் செளத்பார் தொடக்கம் தாழ்வுபாடு உட்பட பல்வேறு கடற்கரையோர பகுதிகளில் நுண்ணிய பிளாஸ்டிக் போன்ற சிறிய அளவிலான உருண்டைகள் இலட்சக்கணக்கில் கரை ஒதுங்கியுள்ளது.
முன்னதாக இலங்கை கடற்பரப்பில் பற்றியெறிந்த எவர் கிறீன் கப்பலில் இருந்து வெளியேறிய அதே போன்ற வடிவமுடைய பொருளே மேற்படி தொடர்ச்சியாக கரையொதுங்கி வருகிறது.
பிளாஸ்டிக் பொருட்கள்
இவ்வாறான பின்னணியில் இன்றைய தினம் (13) கரையோர காவல் திணைக்களம், கடற்படை, இராணுவம் இணைந்து முதற்கட்டமாக கடற்கரை ஓரங்களில் ஒதுங்கியுள்ள குறித்த பிளாஸ்டிக் மாதிரி பொருட்களை அகற்றியுள்ளனர்.
குறிப்பாக கடற்கரையோரங்களில் இலட்சக்கணக்கில் இவ்வாறான ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நுண்ணிய பொருட்கள் காணப்படுகின்றமையினால் முழுமையாக குறித்த பொருட்களை அகற்ற முடியாத நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










பாக்கியலட்சுமி, தங்கமகள் சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan
