தோட்ட நிர்வாகத்தினர் - தொழிலாளர்கள் மோதல்! இரு பெண்கள் உட்பட நால்வர் வைத்தியசாலையில்
தலவாக்கலை, கட்டுக்கலை பிரதேசத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகத்துக்கும் இடையில் இன்று ஏற்பட்ட முறுகலில் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தலவாக்கலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொழிலாளர்கள் தம்மைத் தாக்கினர் என தெரிவித்து தோட்டத்தின் உதவி முகாமையாளரும் சிரேஷ்ட அதிகாரி ஒருவரும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று தோட்டத்தின் உப அதிகாரியும், சிரேஷ்ட அதிகாரியும் தாக்குதல் மேற்கொண்டனர் என தெரிவித்து, பெண் தொழிலாளர்கள் இருவர் லிந்துலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வெளிப்பிரதேசங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை அழைத்துவந்து பணியில் ஈடுபடுத்துவதை அடிப்படையாக வைத்து தோட்ட நிர்வாகத்துக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தையடுத்து கட்டுக்கலை பிரிவைச் சேர்ந்த சுமார் 150 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டனர்.
சம்பவம் தொடர்பில் தோட்டத் தொழிலாளர்களும் தோட்ட நிர்வாகத்தினரும் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
அடேங்கப்பா நம்ம முத்துவா இது, ஆளே மாறிட்டாரே, என்ன செய்துள்ளார் பாருங்க... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam
பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு News Lankasri