பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல்! ஆட்சியை கவிழ்க்க தயாராகும் பலமிக்க மதத் தலைவர்கள்
நாட்டின் பலம் வாய்ந்த மதத் தலைவர்களின் உதவியுடன் அரசாங்கத்தின் பெரும்பான்மையை இல்லாமல் செய்ய தீவிர நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் பெரும்பான்மை பலத்தை இல்லாதொழித்து, காபந்து அரசாங்கத்தின் கீழ் பொதுவான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்காக விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, பாட்டலி சம்பிக்க ரணவக்க, சந்திம வீரக்கொடி உள்ளிட்ட குழுவொன்று நாட்டின் முன்னணி பிக்கு தலைமைத்துவத்துடனும் மிகவும் பலமான பிற மதத் தலைமைகளுடனும் செயற்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நடவடிக்கைக்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் அணி திரட்டப்பட்ட நிலையில், அதிக எண்ணிக்கையிலான விரக்தியடைந்த ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைச் சின்னத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஏற்கனவே அரசாங்கத்தில் இருந்து வெளியேறத் தயாராகி வருகின்ற போதிலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பலமானவர்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேற மறுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், பல சந்தர்ப்பங்களில், அரசாங்கம் விரைவில் பெரும்பான்மையை இழக்கும் என உதய கம்மன்பில கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 5 நிமிடங்கள் முன்

Puzzle iq test: படத்தில் உள்ள காதல் ஜோடிகளில் யார் ஏலியன்? 5 விநாடிகளில் பதிலை கண்டுபிடிங்க Manithan

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
