தமிழர் பகுதியில் திட்டமிடப்பட்ட ஆக்கிரமிப்பு: பொன்னம்பலம் விசனம்(Video)
தமிழ் மக்களுக்கு எதிரான திட்டமிடப்பட்ட இனவழிப்புக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் துணை போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்றைய தினம் (16.06.2023) ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்ற சந்திப்பின் போது தொல்பொருட் திணைக்களத்தினுடைய பொறுப்பதிகாரியுடன் ஜனாதிபதி மாறுபட்ட வாக்குவாதம் மேற்கொள்ளும் நிகழ்ச்சியொன்றை தொலைக்காட்சியூடாக பார்வையிட்டிருந்தோம்.
அரச காணி
குருந்தூர் விகாரை கட்டப்பட்டு விகாரையைச் சுற்றி 300 ஏக்கர் வயல் மற்றும் தனியார் காணிகளை இணைத்து வர்த்தமானி மூலம் தொல்பொருள் திணைக்களத்திற்கு பெற்றுக் கொள்ளுதல் பிழை எனவும் குருந்தூர் மலை தமிழ், பௌத்தர்களால் வழிபாடு செய்யப்பட்ட இடமெனவும் அவற்றை விடுவிக்க வேண்டுமென கூறப்பட்ட விடயங்களை பல ஊடகங்கள் வரவேற்றுள்ளன.
ஆயினும் மகாநாயக்கர் ஒருவர் 300 ஏக்கர் வழங்குதல் தவறான விடயமாகவும் மக்கள் விகாரையை சுற்றி வசித்தல் விகாரையை பாதிக்குமென கடிதமொன்றை எழுதியுள்ள நிலையில் குருந்தூர் மலை அரச காணி எனவும் எவருக்கும் அக் காணி வழங்கப்படாது என நேற்றைய தினம் நிகழ்வொன்றி்ல் ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
மக்களுடைய காணிகளை பறித்து அரசாங்கம் விகாரைகள் கட்டுவது திட்டமிட்ட அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு இணங்கும் செயற்பாட்டுக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் துணை போகின்றனர் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |