ஒரே கோட்டில் தோன்றும் சூரிய குடும்பத்தின் ஐந்து பெரிய கோள்கள் - இனி 2040இல் தோன்றும்
சூரிய குடும்பத்தில் உள்ள ஐந்து பெரிய கோள்கள் ஒரே கோட்டில் தோன்றும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அரிய காட்சி பிரித்தானியா உட்பட வடக்கு அரைக்கோளத்தின் பல நாடுகளில் தெளிவாக காணமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரிய உதயத்திற்கு 45 நிமிடங்களுக்கு முன்பு இது தெளிவாகத் தெரியும் என்று வானியலாளர்கள் கூறுகின்றனர். புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய கிரகங்கள் இந்த வரிசையில் தோன்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீள 2040இல் இது போன்ற காட்சி தென்படும்
சூரியனின் பிரகாசமான வெளிச்சத்தில் கூட பார்க்க கடினமாக இருக்கும் புதனை பார்க்க இது ஒரு சிறப்பு வாய்ப்பாக இருக்கும். இது இன்று முதல் திங்கட்கிழமை வரை உலகின் பல நாடுகளில் இந்த அரிய காட்சி காணப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டு இதுபோன்ற சம்பவம் நடந்ததாகவும், 2040-ம் ஆண்டு வரை இது போன்ற காட்சி நிகழாது எனவும் கூறப்படுகின்றது.