ரஷ்யாவில் நடுவானில் ஏற்பட்ட குழப்பம்! 159 பயணிகளுடன் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
ரஷ்யாவில் நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக பயணிகள் விமானம் ஒன்று வயல்வெளியில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
சோச்சி நகரிலிருந்து 159 பயணிகளுடன் புறப்பட்ட யூரல் ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டமையினால் இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
வெளியான காரணம்
இதன்போது விமானம் கிராமம் ஒன்றின் வயல்வெளியில் தரையிறக்கப்பட்டுள்ளதுடன், விமானத்தில் பயணித்த 159 பயணிகளும், 6 சிப்பந்திகளும் அந்த கிராமத்திலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகளால் விமான உதிரி பாகங்களை வாங்க முடியாமல் ரஷ்யா திணறி வருவதாகவும், இதனால் விமானங்களை பழுது பார்க்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகசுவும் தெரிவிக்கப்படுகின்றது.