மேல் மாகாண பாடசாலைகளில் அனைத்து தரங்களுக்குமான கற்றல் நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்க திட்டம்
மேல் மாகாணத்தில் அனைத்து தரங்களுக்குமான பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னதாக ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மாகாணத்தில் கடந்த 25ஆம் திகதி முதல் தரம் 11 மாணவர்களுக்கு மட்டும் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய ஏனைய வகுப்புக்களையும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், இது குறித்து அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொரோனா சவால்களுக்கு மத்தியில் உயர்தரம் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
