இலங்கையில் டொலர்களுக்கு விற்பனையாகும் வீடுகள்! வருமானம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு டொலர்களுக்கு வீடு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரை ஆறு வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இந்த வீடுகளை டுபாய், அமெரிக்கா, கனடா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வாங்கியுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கொள்வனவுக்காக கடந்த இரண்டு மாதங்களில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் வெளிநாட்டு நாணயக் கணக்கில் 276,650 அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டும் திட்டம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
குறிப்பிட்ட டொலர் தொகையை ஒரே நேரத்தில் செலுத்தினால் 10 சதவீதம் விலைக்கழிவும் பெறுவார்கள். பன்னிபிட்டிய, வீரமாவத்தையில் அமைந்துள்ள வியத்புர வீடமைப்புத் தொகுதியிலிருந்து இந்த வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இன்னும் பத்து வீடுகளை வாங்க வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, டொலர்களுக்கு வீடுகளை கொள்வனவு செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த வருட இறுதிக்குள் சுமார் 352,800 அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்படும்.
டொலருக்கு வீடுகளை விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் அடுத்த வருடம் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டுவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
