உயர்மட்ட அமைச்சர் ஒருவரை பதவி நீக்க திட்டம்? - வெளியாகியுள்ள தகவல்
அரசாங்கத்தின் உயர்மட்ட அமைச்சரவை அமைச்சர் ஒருவரை பதவி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களிலும் வெளியாகியுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறுவதனாலும், அமைச்சரவை முடிவுகளை பகிரங்கமாக விமர்சிப்பதனாலும் இந்த பதவி நீக்கம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் பல அமைச்சர்களிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போதிலும் அவர்கள் அந்த தகவலை மறுக்கவோ ஏற்றுக்கொள்ளவோ இல்லை எனவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேனை, அரசின் செயற்பாடுகனை பகிரங்கமாக விமர்சித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை நேற்றைய தினம் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 4 மணி நேரம் முன்

மகாநதி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் கோமதி பிரியா.. குவியும் வாழ்த்துக்கள் Cineulagam

சோழனை கடத்தியது யார், நிலாவிடம் மொத்த உண்மையையும் கூறிய பல்லவன்.. அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
