நாடு முடக்கப்பட்டால் ஏற்படும் ஆபத்து! - சுகாதார துறை விடுத்துள்ள எச்சரிக்கை
எதிர்காலத்தில் ஏதாவது ஒரு காரணத்திற்காக நாடு மூடப்படும் பட்சத்தில், மாதச் சம்பளம் வாங்குபவர்கள் பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அத்தகைய சூழ்நிலைக்கு நாடு தள்ளப்படாமல் இருக்க, மக்கள் தடுப்பூசி அளவை முழுமையாக பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பொது மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் மக்கள் ஆரோக்கியமாக இருப்பதுதான் முக்கியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டில் நேற்று மேலும் 942 கொரோனா தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இலங்கையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 900க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
மற்றவர்களை அடக்கியாளவே பிறப்பெடுத்த டாப் 3 பெண் ராசிகள்... இவங்ககிட்ட வம்பு வச்சிக்காதீங்க! Manithan