வெளிநாட்டு முதலீட்டாளர்களை நோக்கி இலங்கை அரசின் புதிய வியூகம்

Sri Lanka Economic Crisis Sri Lanka
By Dhayani Jun 03, 2022 07:42 PM GMT
Report

இலங்கையில்  இந்த வருடம் வெளிநாட்டு நேரடி முதலீடு மூலம் 1.5 பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள எண்ணியுள்ளதாக இலங்கை முதலீட்டுச்சபையின் பணிப்பாளர் நாயகம் ரேணுகா வீரக்கோன் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் முதலீடு செய்ய முக்கிய நிறுவனங்கள் திட்டம்

மருபெனிகுழுமம் இந்தியாவின் அதானிகுழுமம் ஆகியவை இலங்கையில் முதலீடு செய்வதற்கான திட்டத்தை முன்வைத்துள்ளன. இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் மீள்புதுப்பிக்கத்த சக்தி துறையில் முதலீடு செய்யவுள்ளன.

வெளிநாட்டு முதலீட்டாளர்களை நோக்கி இலங்கை அரசின் புதிய வியூகம் | Plan Raise 1 5 Billion Through Foreign Investment

மருபெனி குழுமம் 800 மெகாவோட் சூரிய மற்றும் காற்றலை திட்டத்தை முன்னெடுப்பதற்கான திட்டத்தை முன்வைத்துள்ளது . அதானி குழுமம் ஏற்கனவே 500 மெகாவோட் திட்டத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்துள்ளது.

வெளிநாட்டு முதலீட்டாளர்களை நோக்கி இலங்கை அரசின் புதிய வியூகம் | Plan Raise 1 5 Billion Through Foreign Investment

அதனை 18 முதல் 24 மாதங்களில் பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளது என ரேணுகா வீரக்கோன் குறிப்பிட்டுள்ளார். இதேமாதிரியான திட்டங்களை முன்னெடுப்பது குறித்து இரு சீன நிறுவனங்கள் ஆர்வம் கொண்டுள்ளன.

எரிசக்தி துறை தொடர்பான சட்டங்களில் இலங்கை அரசாங்கம் இந்த மாதம் மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளது என வீரக்கோன் தெரிவித்துள்ளார்.இதன் மூலம் பாரிய திட்டங்களை இலகுவான விதத்தில் நடைமுறைப்படுத்தலாம் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் முன்வைக்கப்பட்டுள்ள மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்கள்

இந்த வருடத்திற்கான எங்கள் இலக்குகளை அடைவோம் என நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். இலங்கையில் முன்னெடுப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்கள் வெற்றிகரமான முறையில் முன்னெடுக்கப்படுமென்றால் எங்களால் எங்களின் இலக்குகளிற்கு அப்பாலும் செல்ல முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதல் காலாண்டு கால பகுதியில் இலங்கை முதலீட்டு திட்டங்கள் மூலம் 226 மில்லியன் டொலர்கள் கிடைத்தன என குறிப்பிட்டுள்ள ரேணுகா வீரக்கோன் 2021 ம் ஆண்டை விட இது 16 வீதம் அதிகம் என குறிப்பிட்டுள்ளார்.

பல துறைகளில் முதலீடு செய்ய நாடுகள் விருப்பம்

இந்தியா,சீனா,பிரிட்டன்,அமெரிக்கா உட்பட பல நாடுகள் 1.46 பில்லியன் டொலர் பெறுமதியான 49 முதலீட்டு திட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்வந்துள்ளன. அது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் உற்பத்தி ஆடை, சுற்றுலாத்துறை உட்பட பல துறைகளில் முதலீடு செய்வதற்கு பல நாடுகள் விருப்பம் வெளியிட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களை நோக்கி இலங்கை அரசின் புதிய வியூகம் | Plan Raise 1 5 Billion Through Foreign Investment

நெருக்கடியான தருணத்தில் கூட எங்களிற்கு விண்ணப்பங்கள் வந்தன என தெரிவித்துள்ள ரேணுகா நெருக்கடிகள் முடிவிற்கு வரும் என பல முதலீட்டாளர்கள் கருதுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களை நோக்கி இலங்கை அரசின் புதிய வியூகம் | Plan Raise 1 5 Billion Through Foreign Investment

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US