காலி சிறைச்சாலையின் பெண் சிறைக்காவலரை கொலை செய்ய திட்டம்
காலி (Galle) சிறைச்சாலையின் பெண் சிறைக்காவலர் ஒருவரைக் கொலை செய்ய அதே சிறைச்சாலையில் பணியாற்றும் சிறைக்காவலர் ஒருவர் திட்டமிட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறு குற்றங்களுக்காக காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பெண் கைதி ஒருவர் ஊடாக குறித்த பெண் சிறைக்காவலரை கொலை செய்ய சிறைச்சாலையின் பெண் சிறைக்காவலர் ஒருவர் ஒப்பந்தம் வழங்கியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாடு
குறித்த பெண் சிறைக்காவலர் தனக்கு வழங்கிய ஒப்பந்தம் தொடர்பில் பெண் கைதி ஒருவர் மற்றுமொரு கைதியிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில், பெண் கைதி அதனை சம்பந்தப்பட்ட பெண் சிறைக்காவலரிடம் தெரியப்படுத்தி உள்ளதாகவும், எனவே இது தொடர்பில் அவர் காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |