சந்தஹிரு ஸ்தூபியின் உச்சியில் கிரெஸ்ட் ரத்தினம் வைக்கப்பட்டது!
மகா சங்கத்தினரின் வழிபாடுகளுக்கு மத்தியில் சந்தஹிருசேய தூபியின் உச்சியில் 'கிரெஸ்ட் ரத்தினம் வைக்கும் நிகழ்வு இன்று (8) சுப வேளையில் நிறைவு பெற்றது.
இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி சந்தஹிருசேய தூபியில் வழிபாடுகளில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தூபி 11 ஆண்டுகளுக்குப் பிறகு நவம்பர் 11, 2010 அன்று ஆயுதப்படை மற்றும் சிவில் பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் வழிகாட்டல் மற்றும் உழைப்பினால் கட்டப்பட்டுள்ளது.
இதற்கு நாடு முழுவதிலுமிருந்து வரும் மக்களும் இயன்றவரை உழைப்பு மற்றும் நிதி உதவிகளை வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் நவம்பர் 18ம் திகதிக்குப் பிறகு, பௌத்த சமூகம் இந்த விகாரையை வழிபட வாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 20 மணி நேரம் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
