சிஐடி விசாரணைக்கு எதிரான மனுவை திரும்பப் பெற்ற பியூமி ஹன்சமாலி..!
பிரபல நடிகையும் மாடல் அழகியுமான பியுமி ஹன்சமாலி, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தமக்கு எதிராக மேற்கொள்ளும் விசாரணையின் சட்டபூர்வத் தன்மையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சந்தேகத்திற்குரிய முறையில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பாகக் குற்றப்புலனாய்வுத் துறையின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேற்கொண்டு வரும் விசாரணைகளின் சட்டப்பூர்வ தன்மையை எதிர்த்து இந்த ரீட் முனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான மாயாதுன்னே கொரயா மற்றும் லக்மாலி கருணாநாயக்க ஆகியோர் அடங்கிய இருவர் கொண்ட நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இன்று(24) இந்த மனு தொடர்பில் பரிசீலனை செய்யப்பட்டது.

தனது கட்சிக்காரர் இதுவரை கைது செய்யப்படாததால், இந்த மனுவை திரும்ப பெற அனுமதிக்குமாறு பியூமி ஹன்சமாலி சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா நீதிமன்றில் கோரியுள்ளார்.
மேலும், தேவைப்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் மீண்டும் புதிய மனுவொன்றைத் தாக்கல் செய்யும் சட்டப்பூர்வ உரிமையைத் தக்கவைத்துக்கொண்டு, இந்த மனுவை திரும்ப பெற அனுமதிக்குமாறு அவர் மேலும் கோரியுள்ளார்.
மனுவை திரும்ப பெற்ற பியூமி ஹன்சமாலி
பியூமி ஹன்சமாலியின் சொத்துக்கள் தொடர்பாகக் குற்றப்புலனாய்வுத் துறை மிக விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஷனில் குலரத்ன நீதிமன்றத்தில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணைகளை முழுமையாக நிறைவு செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவைக் கூற முடியாது என்றும், விசாரணைகளை முடிப்பதற்குப் புலனாய்வுத் துறைக்கு மேலும் போதிய கால அவகாசம் தேவைப்படுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இருதரப்பினராலும் முன்வைக்கப்பட்ட சான்றுகள் மற்றும் கருத்துக்களைப் பரிசீலித்த மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு, குறித்த ரீட் மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதற்குப் பியூமி ஹன்சமாலிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட லட்சுமி ப்ரியா... காரணம் என்ன, ஷாக்கில் ரசிகர்கள் Cineulagam
சரவணன் பற்றி அஞ்சலிக்கு தெரிய வந்த உண்மை, இனி நடக்கப்போவது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam