வரலாற்றில் இடம்பிடிக்கும் மரணத்தின் கதை! உயிரிழந்த விமானியை பெருமையோடு நினைவுகூர்ந்த அநுர
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த உலங்கு வானூர்தி விபத்திற்குள்ளானதில், உயிரிழந்த விமானி க்ரூப் கப்டன் நிர்மல் சியம்பலாப்பிட்டியவை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாடாளுமன்றில் பெருமையோடு நினைவுகூர்ந்தார்.
வென்னப்புவ - லுனுவில பகுதியில் ஏற்பட்ட இந்த உலங்கு வானூர்தி விபத்தில் க்ரூப் கப்டன் நிர்மல் சியம்பலாப்பிட்டிய தனது உயிரை இழந்தார்.
அனைவரையும் நினைவுகூர்ந்த ஜனாதிபதி
இதேவேளை, விமானியின் வீட்டிற்கு நேற்று காலை ஜனாதிபதி நேரடியாக சென்று தனது இறுதி அஞ்சலியினையும் செலுத்தியிருந்தார்.

இந்தநிலையில், தற்போது நாடாளுமன்றத்தில் உரையாற்றி வரும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, உயிரிழந்த விமானியை பெருமையோடு நினைவுகூர்ந்ததோடு தனது அஞ்சலியினையும் சபையில் செலுத்தினார்.
அவர் உயிரிழக்கும் போதும் கூட ஏனையவர்களுடைய உயிர் தொடர்பில் கரிசனை செலுத்திய வகையில் தான் உயிரை கொடுத்திருந்தார். வரலாற்றில் பேசப்படும் சுயநலமற்ற மரணம் அவருடையது என்று ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும், சுண்டிக்குளம் பகுதியில் அனர்த்த நேரத்தில் கடமையில் ஈடுபட்ட ஐந்து கடற்படை அதிகாரிகள் வெள்ளத்திற்குள் சிக்குண்டு காணாமல் போனார்கள். இவற்றை வடக்கு அரசியல்வாதிகள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அத்துடன், அனர்த்த காலத்தில் மின்சார விநியோகத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த குளியாபிட்டிய, ஹெட்டிபொல பிராந்திய சேவை நிலையத்தில் பணியாற்றி வந்த 41 வயதுடைய மின்சார சபை ஊழியர் ஒருவரும் உயிரிழந்தார். அவரையும் தாம் நினைவுகூறுவதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
இதேவேளை, அனர்த்த நேரத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த போது தங்களுடைய பெறுமதி மிக்க உயிர்களை இழந்த ஒவ்வொருவரையும் தனித்தனியாக ஜனாதிபதி இதன்போது நினைவுகூர்ந்தார்.
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 45,000 இந்திய மாணவர்கள்: எச்சரிக்கும் கல்வித்துறையினர் News Lankasri
ஜனனி சொன்ன விஷயம், குணசேகரனுக்கு எதிராக விசாலாட்சி இதை செய்வாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam