புலிகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியதாக பிள்ளையான் மீது குற்றச்சாட்டு
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
உதய கம்மன்பில பிள்ளயைானின் சட்டத்தரணியாக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இராணுவப் படைப் பிரிவுகளில் அங்கம் வகிக்காத பிள்ளையான் புலிகளுக்கு எதிரான போரில் ஆயுதம் ஏந்தியதாகவும் இது சட்டவிரோதமானது எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சுமார் ஓராண்டு காலத்திற்கு பின்னர் பிள்ளையான் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். பிள்ளையான் மீது உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் எவ்வித குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மட்டக்களப்பில் வைத்து பிள்ளையான் மீது ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாகவும் அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாகவும் கூறி இருந்தார் என உதயகம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இதே விடயத்தை பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜய பாலகம் நாடாளுமன்ற குறிப்பிட்டிருந்தார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும் நீதிமன்ற தகவல்களின் பிரகாரம் பிள்ளையான் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அது நீதிமன்றத்தில் இன்றைய தினம் அம்பலமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ரவீந்திரநாத் என்பவரின் காணாமல் போதல் தொடர்பில் பிள்ளையானுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழீழ விடுதலை புலிகளினால் முன்னெடுக்கப்பட்ட வந்த சித்திரவதை முகாம்களில் இருந்தார் எனவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வு பிரிவினர் சாட்சியங்களை ஜோடிப்பதில் வல்லவர்கள் எனவும் அவர்களை விசாரணையாளர்கள் என கூறுவதை விடவும் நல்ல கதாசிரியர்கள் என குறிப்பிட முடியும் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam