அதிகார பகிர்வில் தெளிவான முடிவெடுப்பது ஜனாதிபதியின் பொறுப்பு: பிள்ளையான் விளக்கம்
தமிழர்களைப் பொறுத்தவரை அதிகாரப் பகிர்வு விடயத்தில் ஒரு தெளிவான முடிவை எடுக்க வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு இருக்கின்றது என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் (Pillayan) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் (Batticaloa) நேற்று (17.06.2024) இடம்பெற்ற புனரமைக்கப்பட்ட வீதியை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
"இந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்க (Ranil wickremesinghe) போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
ஒரு சிக்கலான காலகட்டத்தில் நாட்டை சரியான இடத்திற்கு செலுத்த முயற்சி எடுத்து வெற்றி பெற்றிருக்கும் அவரின் அறிவும் அனுபவமுமே நாட்டை இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கின்றது.
ஜனாதிபதி தமிழ்க் கட்சிகளை அணுகுகின்ற விடயங்கள் வெளிநாட்டு தூதரகங்களோடு இடம்பெறுகின்ற விடயங்கள் அனைத்தையும் கொண்டுபார்க்கின்ற போது ஜனாதிபதி சாதகமான ஒரு கொடியினை காட்டி இருக்கின்றார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறியுள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |