இறுதிக் கட்டத்தில் பிள்ளையானை சிக்க வைத்த பெரும் ஆதாரம்!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்பிலான தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, நீதிமன்ற விசாரணையின் பின்னர் இவ்விடயம் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிய வந்துள்ளது.
சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு ஏற்பவும் நீதிக் கட்டமைப்புக்களுக்கு ஏற்பவும் தான் விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.
அத்துடன், சில இரகசிய விசாரணைகள் தொடர்பில் ஊடகங்களுக்கோ அல்லது மக்களுக்கோ வெளிப்படுத்த முடியாது எனவும் அது பாதுகாப்பு அல்ல எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், பிள்ளையான் மீதான விசாரணைகளின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த முக்கிய விடயங்களை ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
