பிள்ளையானுக்கு ஆதரவாக சென்றவர்கள் - தமிழ் தேசியத்தை பேசுபவர்கள் மௌனம் காப்பதன் பின்னணி என்ன..!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானுக்காக மட்டக்களப்பில் காந்தி பூங்காவிற்கு அருகில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டமையிட்டு வெட்கப்படுகின்றேன் என்று எமது தலைமுறை கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தமிழினத்திற்கு இனியில்லாத துயரத்தை கொடுத்த தமிழின துரோகியான பிள்ளையானுக்காக இந்த மக்கள் சென்றிருப்பது மிக கேவலமான செயலாக பார்க்கின்றேன்.
2015ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க ஆட்சி காலத்தில் பிள்ளையான் 5 வருடங்கள் சிறையில் இருந்தார்.
அப்போது இவ்வாறான விடயங்கள் இடம்பெறவில்லை. ஆனால் இவருக்கு தண்டனை கிடைக்க வேண்டும், கிடைக்கும். தமிழ் தேசியத்தை பேசுபவர்கள் மௌனமாக இருப்பதின் பின்னணி என்ன? என கேள்வியெழுப்பியுள்ளார்.
முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam