புலனாய்வு துறை நிப்ராஸ் மற்றும் பிள்ளையானின் முக்கிய சகாக்கள் தப்பியோட்டம்! ஆபத்தாகும் விசாரணைகள்
கடந்த ஒருவார காலமாக, இஷாரா செவ்வந்தி விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் விவகாரமும் ஒரு பக்கம் முக்கிய நகர்வுகளில் தீவிரப்படுத்தப்பட்டு கொண்டு தான் இருக்கின்றது.
குறிப்பாக, பிள்ளையானின் முக்கிய சகாக்கள் தலைமறைவாகியமை தொடர்பில் பல இரகசிய தகவல்கள் புலனாய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன.
அந்தவகையில், புலனாய்வு துறை நிப்ராஸ் மற்றும் பிள்ளையானின் முக்கிய சகாக்கள் நாட்டிலிருந்து தப்பியோடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள், கனடா, சுவிட்ஸர்லாந்து போன்ற நாடுகளுக்கு தப்பியோடி வருவதாகவும் கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன என்று அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




