பிள்ளையானுக்காக வருத்தம் தெரிவித்த அர்ச்சுனா.. சாணக்கியன் மீது கடுமையான விமர்சனம்
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்கின்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்பில் தான் கவலைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், "பிள்ளையானின் உற்ற நண்பராக இருந்த சாணக்கியன் தங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுத்துள்ளனர்.
அரசியல் என்பது ஒரு சிறந்த நாடகம். கொலையாளிகளுக்கு நண்பர்களாக இருந்தவர்கள் கூட காலப்போக்கில் மக்களுக்காக பிரேரணை கொண்டு வருகின்றார்கள்.
இப்போது, பிள்ளையான் சிறையில் இருக்கின்றார். உண்மையாகவே பிள்ளையானுக்காக நான் கவலைப்படுகின்றேன். அவரது உற்ற நண்பனால் தான் இந்த பிரேரணை கொண்டு வரப்பட்டது” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |