பிள்ளையானால் கோட்டாபயவிற்கு ஏற்பட்ட பதற்றத்திற்கு கிடைத்த பதில்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்னும் சிவநேசதுரை சந்திரகாந்தன், கடந்த 8ஆம் திகதி பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கு மத்தியில் அவரை சந்தித்து சுமார் 30 நிமிடங்கள் கலந்துரையாடிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று, அக்கலந்துரையாடல் தொடர்பில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி தகவல்களை வெளிப்படுத்தினார்.
இதன்போது, பிள்ளையான், தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறித்து தனது மனக்கவலைகளை வெளிப்படுத்தியதாக உதய கம்மன்பில குறிப்பிட்டார்.
மேலும், தமிழீழ விடுதலை புலிகளை தோற்கடிக்க உதவியதற்காக இந்த அரசாங்கம் தன்னை கைது செய்துள்ளதா என பிள்ளையான் கதறி அழுததாகவும் அவர் கூறியிருந்தார்.
இதற்கு மத்தியில், உதய கம்மன்பில பிள்ளையானை சந்தித்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்ததாக தென்னிலங்கையில் உள்ள சில முக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு சாத்தியம் இருக்குமா என்ற கேள்வி எழும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாவதற்கு மும்முரமாக செயற்பட்டவர்களில் உதய கம்மன்பிலவும் ஒருவர் என்பது இங்கு நோக்கக் கூடிய விடயம்.
இது தொடர்பில் பல முக்கிய விடயங்களை ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |