ஜனாதிபதியை சந்தித்து பேசிய பிள்ளையான்!
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வளர்ச்சி, எதிர்கால அரசியல் முடிவுகள் மற்றும் மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விரைவில் மட்டக்களப்புக்கு வருவதாக ஜனாதிபதி உறுதிமொழி அளித்துள்ளதாகவும், மாவட்டத்தின் வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கூறியுள்ளார்.
மேலும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு குறைபாடுகள் குறித்து பேசப்பட்டதாகவும், இதன் போது உடனடி தீர்வுகள் ஒப்புக் கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
