மக்கள் சலித்து விடவேண்டாம்: மே தின கூட்டத்தில் பிள்ளையான் உரை (Photos)

Pillayan Sri Lanka Politician Sri Lanka Sivanesathurai Santhirakanthan
By Rusath May 02, 2023 07:27 AM GMT
Report

மக்களுக்கு வாக்குறுதியளித்தது போன்று நாம் கிழக்கு மாகாணத்தின் தனித்துவத்தைத் தொடர்ந்து பாதுகாப்போம் என என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான, சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (01.05.2023) மட்டக்களப்பு களுதாவளை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மே தின கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, மீண்டும் மீண்டும் இனவாதப் பேச்சுக்களைப் பேசுகின்ற கூட்டம் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. பட்டிருப்புத் தொகுதியில் கடந்த காலங்களில் இருந்தவர்கள் பாலம் வேண்டாம் சிங்களவர்கள் வந்து விடுவார்கள், தமிழர்களைச் சிங்களம் கற்க வேண்டாம் எனத் தெரிவித்தவர்கள்.

மக்கள் சலித்து விடவேண்டாம்: மே தின கூட்டத்தில் பிள்ளையான் உரை (Photos) | Pillaiyan S Speech At The May Day Meeting

மீட்டெடுக்க முடியும்

தற்போது அவர்களின் வாரிசுகள் வந்து அவர்கள் எதையெல்லாம் வேண்டாம் என்று சொன்னார்களோ அதற்கு தலைகீழாக மாறி அதனையெல்லாம் பயன்படுத்தி எமது மக்களைப் பகடைக்காயாகப் பாவிக்கின்ற சூழல்தான் தற்போது மட்டக்களப்பு அரசியல் மாறியிருக்கின்றது.

இவ்வாறான சதிகளிலிருந்து எமது மக்களைக் காத்துக் கொள்வது எமது மண்ணுக்கான மாண்மீயத்தை எவ்வாறு தக்க வைத்துக் கொள்வது என்பது தொடர்பில் மிகக் கச்சிதமாகச் சிந்தித்து முன்னேற வேண்டிய காலகட்டத்தில்தான் நாங்கள் அரசியல் செய்து கொண்டிருக்கிறோம்.

காணிப்பிரச்சினைகளை நிவர்த்தி செய்தல், பட்டிருப்பு பாலம் தற்போது உடைந்து விழும் அபாயத்தில் உள்ளது. எனவே நான் பொறுப்பு மிக்க அமைச்சர் என்ற ரீதியில் பட்டிருப்பு பாலத்தையும், சந்திவெளி பாலத்தையும், ஒரு வெளிநாட்டுத் திட்டத்தின் கீழ் செப்பனிடுவதற்குத் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றோம்.

தற்போதைய அரசாங்கத்தினூடாக அடுத்து வரும் வருடங்களில் கல்வி, பொருளாதார நிலமைகளையும் நாங்கள் மீட்டெடுக்க முடியும் என நம்புகின்றோம். எனவே எமது மக்கள் சலித்து விடவேண்டாம். மக்களுக்கு வாக்குறுதியளித்தது போன்று நாம் கிழக்கு மாகாணத்தின் தனித்துவத்தைத் தொடர்ந்து பாதுகாப்போம்.

மக்கள் சலித்து விடவேண்டாம்: மே தின கூட்டத்தில் பிள்ளையான் உரை (Photos) | Pillaiyan S Speech At The May Day Meeting

சிறையிலிருந்து 45 வயதில் வெளியே வந்தேன்

மக்கள் எமக்கு அளித்த வாக்கின் பிரகாரம் தற்போது நான் அரச பிரதிநிதி என்ற அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறுகின்ற அனைத்து அபிவிருத்தி செயற்பாடுகளிலும் முன்னின்று செயற்படுவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எமது கட்சி அடைய முடியாத இலக்குகளுக்காகப் போராடாமல் மக்களை இரத்தம் சிந்த வைக்காமல் ஜனநாயக ரீதியாகப் போராடி கையிலே இருக்கின்ற மாகாணசபைக்கு அதிகாரங்களைப் பெற்றுக் கொடுக்கின்ற விடையங்களில் கவனம் செலத்துமே தவிர இன்றுமே மக்களை மடையர்களாக்குகின்ற செயல்பாடுகளுக்குக் கட்சி ஆதரவு வழங்காது.

எனக்கு 3 வயதிலே இந்த நாட்டில் 1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. எனது 40 வயதில் அந்த சட்டத்தால் கைது செய்யப்பட்டு 5 வருடங்கள் சிறையிலிருந்து 45 வயதில் வெளியே வந்தேன். பயங்கரவாத தடைச் சட்டம் என்பதை நான் தனிப்பட்ட ரீதியில் உணர்ந்திருக்கின்றேன்.

அச்சட்டம் பற்றி மக்களும் அறிவார்கள். அது ஏற்றுக் கொள்ள முடியாத சட்டமாகும். இருந்தாலும் உலகத்திலே எங்கேயும் பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறக் கூடாது, பயங்கரவாதிகள் மக்களுக்குச் சவால்விட முடியாது.

மக்கள் சலித்து விடவேண்டாம்: மே தின கூட்டத்தில் பிள்ளையான் உரை (Photos) | Pillaiyan S Speech At The May Day Meeting

பயங்கரவாத நிலமைகள்

மக்களால் வழங்கப்பட்ட இறைமையின் ஆட்சியைக் கவிழ்த்துவிட முடியாது என்பது உலக சவாலாக மாறியிருக்கின்ற சூழலிலே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்பதை நாமும் எமது கட்சியும் எவ்வாறு கையாளப்போகின்றது.

மக்களும், புத்திஜீவிகளும், ஊடகங்களும், சொல்வது போன்று ஜனநாயக இயக்கத்திற்கும், மக்களின் எழுச்சிகளுக்கும், அச்சட்டம் தடையாக அமைந்துவிடக் கூடாது, அவற்றுக்காக நாம் நிச்சயமாக எதிர்ப்பைத் தெரிவிப்போம். ஆனாலும் சஹறான் ஏற்படுத்திய குண்டு வெடிப்புக்கள் போன்று மக்கள் அவற்றுள் அகப்படாமலிருப்பதற்கும், பயங்கரவாத நிலமைகள் வராமலிருப்பதற்கும், தடுப்பதும் ஒரு அரசினுடைய கடமையாகும்.

எதிர்க்கட்சியிலிருப்பவர்கள் அதனை எதிர்க்கலாம். ஏற்கனவே இருக்கின்ற சட்டத்தின் வலிகளை வைத்துக் கொண்டு அதனை முழுமையாக எதிர்க்க முடியாது. அதிலும் நலிவடைந்திருக்கின்ற எமது கல்வி, பொருளாதாரங்களைச் சீரழிக்கின்ற போராட்டங்களை நடாத்த முடியாது.

மாறாக மக்களிடம் வாக்கு பெறும் வரைக்கும் தமிழன், தமிழன் எனக் கத்துவார்கள், அண்மையில் தமிழ் கட்சிகள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் எந்த தமிழ் தலைவரும் தமிழிலே கையொப்பம் இடவில்லை, இதுதான் வேடதாரிகள் என்கின்ற விடையம். தமிழை உலகத்திலே அங்கீகரிக்கப்பட்ட மொழியாக ஆக்குவதற்கு ஒன்றுமே செய்துவிட்டுச் செல்வதில்லை.

மக்கள் சலித்து விடவேண்டாம்: மே தின கூட்டத்தில் பிள்ளையான் உரை (Photos) | Pillaiyan S Speech At The May Day Meeting

விவசாயம் செய்யவேண்டிய பிள்ளையான்

இந்த நிலையில்தான் வட பகுதியிலிருந்து எடுக்கப்படுகின்ற முடிவு கிழக்கு மாகாணத்தில் சாத்தியமில்லை என்று துரத்தியடிக்கின்ற ஒரு அரசியல் இயக்கமாக நாங்கள் பலம் பெறவேண்டும். கிழக்கு மாகாணத்தின் அடுத்த கட்ட தலைவிதியைத் தீர்மானிக்கின்ற தலைவர்களை, உழைப்பாளர் வர்க்கத்திலிருந்து கண்டு பிடித்து அவர்களைத் தலைமையாக்கி விடுவதுதான் எமது கட்சியினுடைய பணியாகும்.

அண்மையில் என்னை ஏளனம் செய்தார்கள் அவர்கள் ஏளனம் செய்தாலும், நாங்கள் வந்த வழிகளை என்றும் மறப்பது கிடையாது. நான் பேத்தாழையில்தான் பிறந்தேன் அங்கு நான் மீன் பிடிக்க வேண்டிய பிள்ளையான் மக்கள் மத்தியில் ஒரு இராஜாங்க அமைச்சராக உள்ளேன்.

ஆடுகளையும், மாடுகளையும் மேய்த்து விவசாயம் செய்யவேண்டிய பிள்ளையான் 75 வருடத் தமிழரசுக் கட்சியின் வரலாற்றிலே மட்டக்களப்பிலிருந்து சவால் விடுமளவிற்கு நாங்கள் வளர்ந்திருக்கின்றோம்.

எமது பாரம்பரிய சமூகத்தின் வேடுவ சமூகத்தின் வாரிசாக வந்திருக்கின்ற பிள்ளையான் பிரபல சட்டத்தரணிகளையும், நீதி அரசர்களையும் வாரிசு அரசியலைச் செய்து கொண்டிருக்கின்றவர்களைக் கதறவிட்டு எங்குச் சென்றாலும் பிள்ளையான், பிள்ளையான் என கோசமிடுகின்ற அளவிற்கு அவர்களைத் தள்ளியிருக்கிறோம்.

அவை அனைத்தும் கிழக்கு மாகாணத்திலிருக்கின்ற தொழிலாளர்களும். தொழிலாளர் வர்க்க பிள்ளைகளும் எமக்குத் தந்த ஆணையாகும்.

இந்த கௌரவம் இந்த மக்களைத்தான் சாரும். ஈழ விடுதலைப் போராட்டத்தில் போராடியதும் நான்தான் தற்போது ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகத் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்கின்ற நாமத்தோடு, மக்களுக்குச் சரியான பணியைச் செய்து கொடுப்பதும் நாங்கள்தான். என அவர் இதன்போது தெரிவித்துள்ளார். 


மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US