நாங்கள் தடையாக இருக்க மாட்டோம்! பிள்ளையான் வழங்கிய உறுதி - செய்திகளின் தொகுப்பு
வடக்கின் தலைவர்கள் கிழக்கின் தனித்துவத்தையும் பாதுகாத்து உண்மையான இணக்கப்பாட்டோடு தெளிவான அரசியல் தீர்வு ஒன்றை முன்வைத்தால் அத்தகைய நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.
கிழக்கு மக்களையும் இணையாக நடத்தக்கூடிய திட்டத்துடன் தெளிவான அரசியல் தீர்வோடு பயணிப்பதற்கான திட்ட வரைபை அவர்கள் எமக்கு முன்வைத்தால் அவ்வாறான தீர்வு முயற்சிக்கு நாம் நிச்சயம் தடையாக இருக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் சிங்கள மக்களோடும் சிங்கள தலைவர்களோடும் பேச வேண்டுமெனக்கூறிக்கொண்டு கடந்த காலகசப்பான அனுபவங்கள் அதனூடான வெறுப்புக்களை வெளியிட்டு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,


மீண்டும் பதின்மூன்றா....! 12 மணி நேரம் முன்

வெளிநாட்டு வேலைக்கு போக பாஸ்போர்ட் வேண்டும்! இலங்கை தமிழ்ப்பெண் கோரிக்கைக்கு கிடைத்த பதில் News Lankasri

மூக்கு, தாடை எலும்புகள் உடைந்து ஆபத்தான நிலையில் நடிகர் விஜய்ஆண்டனி! தற்போது இவரின் நிலை என்ன? Manithan

எனக்கும் ஜனனிக்கும் இருக்கும் ரிலேஷன்ஷிப் எங்களுக்கு தெரியும்! உண்மையை ஒப்புக் கொண்ட அமுதவாணன் Manithan
