உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: திரைமறைவில் உள்ளவர்களை வெளியிட தயாராகும் அநுர
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தின் திரைமறைவில் உள்ளவர்கள் தொடர்பான தகவல்கள் எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பகிரங்கப்படுத்தியுள்ளார்.
இந்த தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நல்லாட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு, கோட்டாபய ஆட்சியையும் கடந்து இன்று அநுர அரசின் கைகளுக்கு வந்துள்ளன.
இதில் பலியாகியவர்களுக்கு இந்த வருடம் நாடெங்கிலும் 6ஆவது ஆண்டு நினைவேந்தல்களும் இடம்பெறவுள்ளன.
இந்நிலையில் அநுரகுமார திசாநாயக்க கூறியதை போல அடுத்த 18 நாட்களில் சூத்திரதாரிகளை அரசாங்கம் வெளிப்படுத்தும் என்ற நம்பிக்கையில் காத்துக்கிடக்கின்றனர் நாட்டு மக்கள்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
இந்த உயிர்த்த ஞாயிறு தினக் கொடூர தாக்குதல், புலப்படும் மற்றும் கண்ணுக்குத் தெரியாத இரண்டு வலையமைப்புகளின் மூலம் நடத்தப்பட்டதாக விசாரணை அறிக்கைகளை மேற்கோள் காட்டிய தகவல்கள் முன்னதாக வெளியாகியிருந்தன.
இதில் முக்கிய சூத்திரதாரிகளாக சஹ்ரான் கூட்டணி காணப்பட்டனர். இருப்பினும், தாக்குதல் இடம்பெற்று நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் சனல்4 என்ற ஊடகம் மொட்டு அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சராக இருந்த பிள்ளையானுக்கும், இந்த தாக்குதலுக்கும் முக்கிய தொடர்பு இருப்பதான முத்திரையை குத்தியிருந்தது.
தாக்குதலைத் திட்டமிடுவதிலும் ஒருங்கிணைப்பதிலும் ஈடுபட்டார் என கூறப்படும் பிள்ளையான மீதான குற்றச்சாட்டுக்கள் இலங்கை மற்றும் சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளன.
முன்னதாக பிள்ளையானின் செயலாளராகப் பணியாற்றிய அசாத் மௌலானா, பின்னர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அரசியல் தஞ்சம் கோரினார்.
பிள்ளையானுக்கும் முன்னாள் புலனாய்வுத் அதிகாரி சுரேஷ் சலேய்க்கும் இடையே தொடர்பு இருப்பதாக மௌலானா ஐக்கிய நாடுகள் சபைக்கும் சனல் 4 க்கும் வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த வெளிப்பாடுகளைத் தொடர்ந்து, ஒரு நாடாளுமன்ற விவாதம் அப்போது நடைபெற்றது. மேலும் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரு விசாரணைக் குழுவை நியமித்தார்.
ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலைக்காக பிள்ளையான் ஆரம்பத்தில் மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டார்.
பிள்ளையான்
அதே கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட அவரது நெருங்கிய சகாவான கலீல் என்பவர், இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இணைக்கப்பட்ட ஒரு சார்ஜென்ட் ஆவார் என்றும், அவர் சஹ்ரானுடன் நீண்டகால உறவுகளைக் கொண்டிருந்தார் என்றும் சனல் 4 ஆவனம் தெரிவித்தது.
பிள்ளையான் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகி மட்டக்களப்புக்குத் திரும்பியபோது, அவர் மேற்கூறிய கலீலுடன் நெருக்கமாகப் பணியாற்றத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
இந்தக் காலகட்டத்தில்தான் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை இடம்பெற்றுள்ளது.
பிள்ளையான், கலீல் மற்றும் சஹ்ரான் கும்பல் சிறையில் இருந்தபோது, பிள்ளையானும் கலீலும் சஹ்ரானின் குழுவுடன் நெருங்கிய உறவுகளைப் பேணி வந்ததாக சனல் 4 மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் செய்தி வெளியிட்டுள்ளன.
அசாத் மௌலானா அளித்த வாக்குமூலங்களின்படி, காத்தான்குடியில் உள்ள அலியார் சந்திக்கு அருகில் நடந்த ஒரு சிறிய குண்டு வெடிப்புக்கு சஹ்ரானின் குழு பொறுப்பேற்றுள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து, அவர்கள் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டனர்.
இதை பிள்ளையானின் சொந்த புத்தகம் கூட இந்த நிகழ்வுகளைப் பதிவுசெய்து. இது அவர்களை ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடையவர்கள் என்று அடையாளம் காட்டியுள்ளது.
மௌலானாவின் கூற்று
சஹ்ரானின் குழு தங்கள் மத நம்பிக்கைகளுக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருப்பதாக பிள்ளையான் கூறியதையும் அசாத் மௌலானாவின் அறிக்கை வெளிப்படுத்துகிறது.
மௌலானாவின் கூற்றுப்படி, சுரேஷ் சல்லாய்க்கும் சஹ்ரானின் குழுவிற்கும் இடையே ஒரு தொடர்பை ஏற்படுத்த பிள்ளையான் தன்னிடம் கூறியது, "அவர்களின் திறனை அதிகப்படுத்த" என சொல்லப்பட்டது.
கோட்டாபய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், சிறையில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வார் என்று பிள்ளையான் நம்பியதாக மௌலான மேலும் கூறினார்.
மௌலானாவின் கூற்றுப்படி, கலீலும் பிள்ளையானும் சஹ்ரானை சுரேஷ் சல்லாயுடன் அறிமுகப்படுத்த உதவியுள்ளனர்.
தாக்குதலுக்கு முன்னதாக கலீல் சஹ்ரானுடன் வழக்கமான தொலைபேசி உரையாடல்களைப் பராமரித்து, நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தமையை மௌலானாவின் கருத்துக்கள் வெளிப்படுத்தியிருந்தன.
சாய்ந்தமருது குண்டுவெடிப்புக்குப் பிறகு இந்த நடவடிக்கையின் நகர்வுகள் அம்பலமானது,
அந்த வெடிப்பில் சஹ்ரானின் உறவினர்கள் உட்பட 14 பேர் தற்கொலை குண்டுவெடிப்பில் உயிரிழந்திருந்தனர்.
அந்த இடத்தில் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ஒரு சிம் அட்டை கண்டுபிடிக்கப்பட்டு தடயவியல் பகுப்பாய்விற்காக அனுப்பப்பட்டது.
விசாரணையில் அந்த சிம் அட்டை கலீலுக்கு சொந்தமானது என்றும், உயிர்த்த தாக்குதல் நடந்த நாள் வரை தொலைபேசி தொடர்புகளுக்குப் பயன்படுத்தப்பட்டது என்றும் தெரியவந்தது.
சஹ்ரானும் அவரது குழுவும் இறந்த போதிலும், பிள்ளையானும் கலீலும் நாட்டின் உயரடுக்கினரிடையே சுதந்திரமாக நடமாடுவதாக பின்னர் குற்றச்சாட்டுக்கள் வெளிவந்தன.
சஹ்ரானின் குழு
முறையான விசாரணை நடத்தினால், 2017 முதல் சஹ்ரானின் குழு பிள்ளையான் மற்றும் கலீலின் கீழ் பயிற்சி பெற்றது தெரியவரு என சில அரசியல் தலைமைகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
சஹ்ரானைப் போன்ற ஒரு சிறிய குழு வெளிப்புற ஆதரவு இல்லாமல் பல ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தியிருக்க வாய்ப்பில்லை என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் இருந்த சூத்திரதாரிகளின் நிழல்கள் மறைந்திருப்பதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் ஆட்சியை கைப்பற்றுவதற்கு முன்னதாக கூறிவந்தன.
ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கு மட்டக்களப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. சட்டமா அதிபரை பிரதிநிதித்துவப்படுத்திய மூத்த அரசு சட்டத்தரணி, வழக்கைத் தொடர வேண்டிய அவசியமில்லை என்று திடீரென அறிவித்தார்.
இதன் விளைவாக, ஜனவரி 13, 2022 அன்று, பிள்ளையான் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் இலங்கையில் நடைபெறும் அதிகாரப்பூர்வ விசாரணையின் திரைமறைவு தொடர்புகளையும் வெளியிட மௌலானா விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என தற்போதைய எதிர்கட்சி தரப்புகள் வாதிடுகின்றன.
விசாரணைகள் நேர்மையாக நடந்தால், சஹ்ரானின் கூட்டணியில் கைகோர்த்த சூத்திரதாரிகளின் பெயர்களும் அம்பலமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam
