மணல்காடு புனித அந்தோனியார் ஆலயத்திலிருந்து மடு அன்னை திருத்தலத்திற்கு பாத யாத்திரை
மன்னார் - மருதமடு அன்னையின் பெரும் திருவிழாவை முன்னிட்டு வடமராட்சி, கிழக்கு மணல்காடு புனித அந்தோனியார் ஆலயத்திதிலிருந்து மணல்காடு பக்தர்கள் 100 க்கு மேற்பட்டோர் நேற்று(09.08.2026) பிற்பகல் 3:00 மணியளவில் பாத யாத்திரை பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
மணல்காடு பங்கு தந்தையின் ஆசீர்வாத வாழிபாட்டுடன் ஆரம்பமான பாதயாத்திரை நேற்று இரவு மணல்காடு சந்தி மருதங்கேணி புதுக்காடு ஊடக இயக்கச்சி தேவாலயத்தை சென்றடைந்த அங்கிருந்து இன்று(10) காலை மீண்டும் பாத யாத்திரை ஆரம்பமாகவுள்ளது.
பெரும் திருவிழா
இதேவேளை மணல்காடு கிராமத்திலிருந்து மருத மடு அன்னை தேவாலயம் செல்லும் யாத்திரிகர்களுடன் பயண பாதையிலுள்ள கிறிஸ்தவ மக்கள் பலரும் இணைந்து மடு அன்னை தேவாலயம் வரை செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
