முன்னாள் அமைச்சர்களின் சிறையில் தீவிர சோதனை! அதிகாரிகளிடம் சிக்கிய பொருள்
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை அறைகளில் விசேட சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனையின் போது, கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட பல உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள்
வெலிக்கடை சிறைச்சாலையின் 'கே' பிரிவில் இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, வெலிக்கடை சிறைச்சாலையின் 'கே' பிரிவில் இருவருடன் சேர்த்து சுமார் 150 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு நிதிமோசடி குற்றச்சாட்டில் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri
கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri