லண்டனுக்கான விமான சேவை மீண்டும் தொடங்கியது! - வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு
அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவிற்கு இடையே கோவிட் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், பிலடெல்பியா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு விமான சேவைகள் மீளவும் தொடங்கப்பட்டுள்ளன.
இதன்படி, வாரத்திற்கு நான்கு இடைவிடாத விமான சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் விமான நிறுவனங்கள் மட்டும் தான் லண்டன் Heathrow மற்றும் பிலடெல்பியா சர்வதேச விமான நிலையத்திற்கு தொடர்ந்து விமான சேவைகளை முன்னெடுத்து வந்தது.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் மார்ச் 2020 நடுப்பகுதியில் பிலடெல்பியா மற்றும் லண்டனுக்கு செல்லும் அனைத்து விமானங்களையும் இடைநிறுத்தியது. இந்நிலையிலேயே, தற்போது விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இரு நாடுகளுக்கும் இடையில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டிருக்கிறது.
அந்த வகையில், இரண்டு தடுப்பூசிகளும் செலுத்திக்கொண்ட பயணிகள் பிரித்தானியா செல்ல வேண்டுமானால், விமானம் புறப்படுவதற்கு சுமார் 48 மணி நேரங்களுக்கு முன்பாக, பயணிகள் இருப்பிடத்திற்கான படிவங்களை நிரப்ப வேண்டும்.
அத்துடன், பிரித்தானியா சென்ற பின், கோவிட் பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டு அதற்குரிய பணத்தையும் பயணிகளே கொடுக்க வேண்டும்.
தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள், பிரித்தானியா செல்வதற்கு 3 நாட்களுக்கு முன் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். பிரித்தானியா சென்றவுடன் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 13 மணி நேரம் முன்
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan