இலங்கையில் உள்ள பிலிப்பைன்ஸ் குடிமக்களை திருப்பி அனுப்புமாறு உத்தரவு!
இலங்கையில் உள்ள பிலிப்பைன்ஸ் குடிமக்கள்
வெளிநாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் தங்கியுள்ள பிலிப்பைன்ஸ் நாட்டவர்களை உடனடியாக திருப்பி அனுப்புமாறு பிலிப்பைன்ஸ் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பில் உள்ள பிலிப்பைன்ஸ் துணை தூதரகத்துக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருப்பி அழையுங்கள்
எமது நாட்டிடம் பணம் உள்ளது. எனவே எமது நாட்டவர்களை திருப்பி அழைத்து செல்லுங்கள் என்று நேற்று ஞாயிற்றுக்கிழமை, அந்த நாட்டின் வெளியுறவுத்துறை செயலர் தியோடோரோ லோக்சின் உத்தரவிட்டார்.
இந்தநிலையில் டாக்காவில் உள்ள பிலிப்பைன்ஸ் தூதரகம் மற்றும் கொழும்பில் உள்ள பிலிப்பைன்ஸ் துணைத் தூதரகம் மூலம், இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்று வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் சாரா லூ அரியோலா கூறியுள்ளார்.
தொடர்புகள்
இதேவேளை பிலிப்பைன்ஸுக்குத் திரும்ப விரும்பும் இலங்கையில் உள்ள பிலிப்பைன்ஸ் குடிமக்கள், கொழும்பில் உள்ள பிலிப்பைன்ஸ் துணைத் தூதரகத்தை தொடர்பு கொள்ளும் முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
+94 114322267 மூலம் தொடர்பு கொள்ளலாம்; +94 114322268; +94 112307162; philcon.cmb@cotrop.net; அல்லது philcon1.cmb@cotrop.net.





உங்கள் குடும்பத்தை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு சில முக்கிய தகவல்கள் News Lankasri
