நடுக்கடலில் கப்பலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து: 31 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழப்பு
தெற்கு பிலிப்பைன்ஸ் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 31 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பிலிப்பைனிஸின் லேடி மேரி ஜாய் 3(Lady Mary Joy 3) என்ற கப்பல் மிண்டனாவ் தீவில் உள்ள ஜாம்போங்கா நகரத்திலிருந்து சுலு மாகாணத்தில் உள்ள ஜோலோ தீவுக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கப்பலில் இருந்த பயணிகள் பதற்றத்தில் கடலில் குதித்துள்ளனர். இதில் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 7 பேர் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிலிப்பைன்ஸ்சின் தெற்கு கடற்கரை பகுதியில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழந்ததாகவும், 230 பேர் மீட்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கப்பல் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

High Voltage Tracks கடந்த வாரம் ஒளிபரப்பான தொடர்களில் TRPயில் மாஸ் காட்டியது எது... டாப் 5 விவரம் இதோ Cineulagam
