பொது போக்குவரத்து வாகனங்களில் அத்துமீறல், முடக்கல் குறித்து எச்சரிக்கும் சுகாதார அதிகாரிகள்
இலங்கையின் பொதுப் போக்குவரத்துக்களில் கோவிட் தொற்றுக்கு எதிரான சுகாதார செயற்பாடுகள் மோசமாகியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுகாதார பரிசோதகர்கள் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். பொதுப்போக்குவரத்து வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்கள் ஆசனங்களுக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றச்செல்கின்றன.
இந்தநிலைமை தொடருமாக இருந்தால், நாட்டில் கோவிட் தொற்றுக்கள் அதிகரிப்பதற்கான ஏதுக்கள் இருப்பதாக சுகாதார பரிசோதகர்கள் சங்க தலைவர் உபுல் ரோஹன எச்சரித்துள்ளார்.
எனவே அதிகாரிகள், பயணிகள் வாகனங்கள் தொடர்பில் உரிய செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்று ரோஹன கோரியுள்ளார்.
இல்லையெனில் நாடு மற்றும் ஒரு முடக்கலுக்கு செல்லவேண்டியிருக்கும் என்றும் ரோஹன தெரிவித்துள்ளார்.
