காப்புறுதி நிறுவனங்களின் முகவர்களாக மாறும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்

Badulla Ministry of Health Sri Lanka Sri Lankan Peoples National Health Service
By Aanadhi Jun 24, 2023 03:17 AM GMT
Report

பதுளை மாநகர பொதுச் சுகாதார பரிசோதகர்கள், காப்புறுதி நிறுவனங்களின் முகவர்களாக மாறி வருவதாக பொதுமக்களால் பல்வேறு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பதுளை மாநகர சபையின் சில பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தமது பதவியை துஷ்பிரயோகம் செய்து கடை மற்றும் உணவக உரிமையாளர்களுக்கு காப்புறுதித்திட்டங்களில் இணைந்து கொள்ளுமாறு அழுத்தம் கொடுப்பதாக கையொப்பமற்ற எழுத்துப்பூர்வ முறைப்பாடு கிடைத்துள்ளதாக பதுளை மாநகர ஆணையாளர் ஜகத் பிரியஷான் தெரிவித்துள்ளார்.

முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்த ஜகத் பிரியஷான், அவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்ட பொதுச் சுகாதார பரிசோதகர் ஏற்கனவே கடைகள் இல்லாத பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

காப்புறுதித் திட்ட விற்பனை

காப்புறுதி நிறுவனங்களின் முகவர்களாக மாறும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் | Phi Staff Become Agents Of Insurance Comp

பதுளை மாநகர சபையின் மற்றுமொரு உள்ளூராட்சி சபையிலிருந்து அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்ட பொதுச் சுகாதார பரிசோதகரொருவர், காப்புறுதி நிறுவனம் ஒன்றின் விற்பனைப் பிரதிநிதியாகச் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த நிறுவனத்தின் காப்புறுதித் திட்டங்களை விற்பனை செய்வதற்கு தனது பொதுச்சுகாதார பரிசோதகர் பதவியின் செல்வாக்கைப் பயன்படுத்தி வருவதாகவும் மேலும் பல பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அவருக்கு ஆதரவாக இருப்பதாகவும் பொதுமக்கள், வர்த்தகர்கள் முறைப்பாடு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொது சுகாதார பரிசோதகர்கள் உணவகங்கள் மற்றும் கடைகளில் சோதனைகளை மேற்கொள்ளல், மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு செயல்முறை உட்பட பல செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர்.

பொதுமக்களின் முறைப்பாடு

காப்புறுதி நிறுவனங்களின் முகவர்களாக மாறும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் | Phi Staff Become Agents Of Insurance Comp

அவ்வாறான நிலையில் ஒருசில பொது சுகாதார பரிசோதகர்கள் தாங்கள் முகவர்களாக உள்ள காப்புறுதி நிறுவனத்திற்கு, வர்த்தகர்களின் காப்புறுதித் திட்டங்களை மாற்றுமாறு அழுத்தம் கொடுப்பதாக தெரிய வந்துள்ளது.

அவ்வாறு காப்புறுதித்திட்டங்களை மாற்றினால் வர்த்தக நிலையங்களின் காணப்படும் குறைபாடுகளை கண்டுகொள்ளாமல் விடவும், அபராதங்கள் விதிக்காமலும் இருப்பதாக அவர்கள் வர்த்தகர்களுக்கு அழுத்தங்களை பிரயோகிப்பதாக பொதுமக்களின் முறைப்பாடுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இவ்வாறான சுகாதார பரிசோதகர்களின் செயல்கள் தொடர்பில் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  


மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US