க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை
கோவிட் - 19 வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சுடன் இணைந்து முன்னெடுத்து வருகின்றது.
அதன்படி கடந்த இரண்டு நாட்களாக இலங்கையில் பல இடங்களில் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான பைசர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெக்கப்பட்டு வருகின்றது.
கோறளைப்பற்று
அந்த வகையில் கோறளைப்பற்று மத்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிலுள்ள உயர்தர கல்வி பயிலும் மாணவர்களுக்கு முதலாம் கட்ட பைசர் தடுப்பூசி ஏற்றும் பணிகள் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரி.நஜீப்காப் (S.R.Najeebkap) தலைமையில் நடைபெற்று வருகின்றது.
வாழைச்சேனை
வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை, வாழைச்சேனை ஆயிஷா மகளிர் வித்தியாலயம் ஆகியவற்றில் க.பொ.த உயர்தர பரீட்சை ஏழுதும் மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.






பலமான ஒரு அரசின் நேரடி ஆதரவின்றி, தேசிய இன விடுதலை சாத்தியமற்றது! 21 மணி நேரம் முன்
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam