டீசல் தட்டுப்பாடு குறித்த வதந்திகளுக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனம் முற்றுப்புள்ளி
களஞ்சியசாலையில் போதியளவு டீசல் இருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
டீசல் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை மறுத்த அவர், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலையில் இருந்து போதுமான அளவு டீசல் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பொலிஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டிருந்த போதிலும் அத்தியாவசிய சேவைகளுக்காக எரிபொருள் விடுவிக்கப்பட்டது.
எதிர்வரும் திங்கட்கிழமை (16) மற்றுமொரு டீசல் சரக்கு கப்பல் வரவுள்ளது. அதுவரை நாட்டை சீராக நடத்துவதற்கு போதுமான டீசல் கையிருப்பில் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அத்தியாவசிய சேவைகளைத் தவிர விநியோகிப்பதற்கு டீசல் வழங்கப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் இணைந்த பௌசர் சங்கம் தெரிவித்துள்ளது.
பௌசரை இயக்குவதற்கு டீசல் வழங்கப்படுவதில்லை என சங்கத்தின் அதிகாரி ஒருவர் குற்றம் சுமத்தியுள்ள நிலையில், அவர்களுக்கு வழங்கப்பட்ட வரையறுக்கப்பட்ட டீசல் கையிருப்பு பெட்ரோல் கொண்டு செல்ல மட்டுமே பயன்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருக்கும் ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட பாவனி! வாயடைத்துப்போன ரசிகர்கள் Manithan

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan
