லண்டனில் பற்றியெரிந்த பெட்ரோல் நிரப்பு நிலையம்
கிழக்கு லண்டனில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பெட்ரோல் பம்புகள் தீப்பிடித்து எரிந்துள்ளது.
கார் ஒன்றுக்கு எரிபொருள் நிரப்பிய நிலையில் தீப்பரவல் ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
இன்று சனிக்கிழமை பிற்பகல் சுமார் 3 மணியளவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து தீ வேகமாக வளர்ந்து கறுப்பு புகை வெளியேறியது. இதனையடுத்து டேகன்ஹாம், வூட் லேனில் உள்ள பெட்ரோல் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதி மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிர்ஷ்டவசமாக லண்டன் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்ததால் தீ அதிகம் பரவவில்லை. 10 நிமிடங்களில் தீ அணைக்கப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 மணி நேரம் முன்

தமிழகத்தில் முதல் நாளில் சிவகார்த்திகேயனின் மதராஸி படம் செய்த மொத்த வசூல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam
