பெட்ரோல் உண்டு: மின்சாரம் இல்லை - மூன்றுமணி நேரம் வரிசையில் நின்ற பொதுமக்கள்
வவுனியா - ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் இருப்பிலிருந்தும் மின்சாரம் தடைப்பட்டமையால் மூன்று மணித்தியாலங்கள் தாமதத்தின் பின்னர் எரிபொருள் வழங்கப்பட்டது.
வவுனியாவில் இன்று காலை அனேக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மாத்திரம் வழங்கப்பட்டு வந்தது.
எரிபொருள் நிரப்பும் செயற்பாட்டில் தாமதம்
இதனால் பெட்ரோலை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் பொதுமக்கள் கூடிநின்றனர்.
எனினும் காலை8.30 மணியளவில் மின்சாரம் தடைப்பட்டமையால் எரிபொருள் நிரப்பும் செயற்பாட்டில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் வரிசையில் நின்ற பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களைச் சந்தித்தனர். எனினும் காலை 11 மணியளவில் மின்சாரம் வந்ததும் மீண்டும் எரிபொருள் நிரப்பும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது.



