இலங்கையில் எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளிவந்துள்ள புதிய செய்தி
உலகில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக நாட்டில் அதிகரித்துள்ள எரிபொருள் விலைகளை அரசாங்கம் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கும் என வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி.சரத் தெரிவித்துள்ளார்.
இது நிரந்தர விலை உயர்வு அல்ல என்றும், எந்தவொரு பேரழிவு சூழ்நிலையிலும் மக்களை சிக்கித் தவிக்க விடாத மக்கள் அரசாங்கம் தற்போது செயல்பட்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் வரிசைகள் குறித்து தேவையற்ற அச்சத்தை உருவாக்கி மக்கள் பீதி அடைய வேண்டாம். இந்த கடினமான சூழ்நிலையை அரசாங்கத்துடன் மிகவும் புத்திசாலித்தனமாகவும் கூட்டாகவும் எதிர்கொள்ள வேண்டும்.
மக்களுக்கான நிவாரணம்
உலக அரசியல் சூழ்நிலையைப் பொறுத்து சில பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என்றாலும், அரசாங்கம் எப்போதும் மக்களுடன் நின்று நிவாரணம் வழங்கத் தயாராக உள்ளது.

வலுவான தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே இதுபோன்ற உலகளாவிய பேரழிவுகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்.
நாட்டின் வெளிநாட்டு இருப்பு மற்றும் கருவூலம் ஏற்கனவே வளமாகி வருகிறது. அரசாங்கம் பொருளாதார ரீதியாக வலுவடைந்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 3 மணி நேரம் முன்
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri