எரிபொருள் நிலையங்கள் மூடப்படுவது குறித்து வெளியாகியுள்ள தகவல்
பல எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயத்தில் இருப்பதாக கனிம எண்ணெய் பிரிப்பாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், QR குறியீடு மூலம் எரிபொருள் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் கிராமப்புறங்களில் அமைந்துள்ள பல எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயத்தில் இருக்கிறது.
எரிபொருள் விற்பனையில் வீழ்ச்சி

மின்சாரக் கட்டணம் மற்றும் ஏனைய செலவுகள் அதிகரிப்பு, எரிபொருள் விற்பனை மட்டுப்படுத்தப்பட்டமை உள்ளிட்ட பல காரணிகளினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த வருடம் ஜனவரி முதல் இந்த வருடம் ஜனவரி வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் எரிபொருள் விற்பனை 30 முதல் 70 வீதத்திற்கு இடையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட லட்சுமி ப்ரியா... காரணம் என்ன, ஷாக்கில் ரசிகர்கள் Cineulagam
சரவணன் பற்றி அஞ்சலிக்கு தெரிய வந்த உண்மை, இனி நடக்கப்போவது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri