எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் இன்று அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
எரிபொருள் விலை குறைக்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் (10.03.2023) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளால் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வடைந்து வருகின்றது.
புதிய எரிபொருள் இருப்புக்கள் கொள்வனவு
அண்மைய நாட்களில் ரூபாயின் பெறுமதி வலுவடைந்து வருவதால், புதிய எரிபொருள் இருப்புக்கள் குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்படும்.
அத்துடன், கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்படும் சரக்குகள் குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும். இந்த குறைப்பின் நன்மையினை நுகர்வோர் விரைவில் பெற்றுக் கொள்வார்கள்.
எரிபொருள் விலை குறைப்பு ஏனைய பொருட்களின் விலைகளை குறைப்பதற்கும் உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
