திருகோணமலையில் போதைப்பொருள் மாபியாவுக்கு எதிராக சேகரிக்கப்பட்ட மனுக்கள்(Photos)
திருகோணமலை - கந்தளாயில் பொதுமக்களிடம் தரம் குறைந்த மருந்துகளினால் நோயாளர்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதி, போதைப்பொருள் மாபியா போன்றவற்றுக்கெதிராக மனுக்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனு சேகரிப்பானது இன்று(20.08.2023) கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போராட்ட முயற்சி
ஐக்கிய மக்கள் சக்தியின் சேருவில தொகுதி அமைப்பாளரினால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இதற்காக வைத்தியசாலைக்கு வரும் சகலரிடமும் கையொப்பம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், தற்போதைய சுகாதார அமைச்சரை பதவியில் இருந்து நீக்கும் வரை இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும், அவருக்கு எதிராக கட்சித் தலைமையினால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியை பல பிரதேசங்களில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் சேருவில தொகுதி அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.









அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
