சர்ச்சையில் சிக்கிய எலான் மஸ்க்கின் கனேடிய குடியுரிமை
உலகின் பெரும் கோடீஸ்வரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க்கின் கனேடிய குடியுரிமைக்கு எதிராக 250,000 குடிமக்கள் மனு கையளித்துள்ளனர்.
எலான் மஸ்க்கின் கனேடிய கடவுச்சீட்டை பறிக்குமாறு கோரி நாடாளுமன்ற 250,000 குடிமக்கள் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளராக எலான் மஸ்க் செயற்பட தொடங்கியதன் பின்னர், "கனடா ஒரு உண்மையான நாடல்ல" என்று கூறியதன் பிறகு கனேடிய மக்கள் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
மஸ்க்கின் போஸ்ட்
ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் கனடாவுக்கு 25 சதவீத இறக்குமதி வரி விதிக்கவும், அதை அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக இணைக்கவும் திட்டமிட்டுள்ளதாக குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், எலான் மஸ்க், ட்ரம்பின் நிர்வாகத்தில் DOGE (Department of Government Efficiency) தலைவராக இருப்பதால், கனேடிய இறையாண்மைக்கு எதிராக செயல்படுகிறார் என்று இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, மஸ்க், அவர் தனது செல்வமும் அதிகாரமும் பயன்படுத்தி கனேடிய தேர்தல்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தி இருக்கின்றார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், மஸ்க்கின் குடியுரிமை நீக்கப்படுவது கடினம். கனடா தகவல் மோசடி அல்லது தேசத்துரோக குற்றச்சாட்டுகளில் மட்டுமே குடியுரிமையை நீக்க முடியும்.
கனடாவின் சட்டத்தின்படி, மஸ்க் தனது குடியுரிமையை சட்டப்பூர்வமாக பெற்றிருப்பதால், அதை திரும்பப் பெற முடியாது என சட்ட பேராசிரியர் ஆட்ரி மெக்லின் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தப்பிக்க நினைத்து முத்துவின் கண்ணில் பட்ட ரோஹினி மாமா, இனி நடக்கப்போவது என்ன?- சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

ட்ரம்ப் முன்வைத்த ஒப்பந்தத்துக்கு சம்மதித்தார் உக்ரைன் ஜனாதிபதி: விரைவில் கையெழுத்தாகலாம் News Lankasri
