நீதியரசர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புங்கள்! சபாநாயகரிடம் எதிர்க்கட்சிகள் கூட்டு மனு கையளிப்பு
உயர்நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் நீதியரசர்களின் வெற்றிடங்களை நிரப்புவதில் ஏற்படும் தாமதம் குறித்துக் கவனம் செலுத்தி, அந்த வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட விசேட கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதம் கையளிப்பு நடவடிக்கை இன்று(12.06.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரசமைப்புப் பேரவையின் தலைவர் என்ற ரீதியில், இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்தி, நீதியரசர்களின் வெற்றிடங்களை விரைவாக நிரப்புவதற்குரிய தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு சபாநாயகரிடம் இந்தக் கடிதத்தின் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்கட்சி தரப்பினரின் முக்கிய கோரிக்கை
நாடாளுமன்றச் சபாநாயகர் என்ற முறையில் அரசமைப்பு விதிகளின்படி நேர்மையாகச் செயற்பட்டு, மக்களின் இறையாண்மையின் முக்கிய அங்கமாக விளங்கும் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளைச் சபாநாயகர் முன்னெடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்களின் பற்றாக்குறை நிலவுவதால் ஆயிரக்கணக்கான வழக்கு விசாரணைகள் தேங்கிக் கிடப்பதுடன், பொதுமக்களுக்கான நீதி வழங்கல் செயற்பாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இந்த நிலையைத் தற்போதைய அரசு உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் இந்தக் கடிதத்தின் மூலம் மேலும் வலியுறுத்தியுள்ளன.
ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்த கேன் வில்லியம்சன்! சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்..

இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
FIFA உலகக் கிண்ணம்... குழுச் சுற்றில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய ஆட்டங்கள் News Lankasri