உத்தேச சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது....! கர்தினால் மல்கம் ரஞ்சித் மனு தாக்கல்
இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி கர்தினால் மல்கம் ரஞ்சித் உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
உத்தேச சட்டமூலம் இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணானது என அறிவிக்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனு தாக்கல்
இந்த மனுவில் சட்டமா அதிபர் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார். இதனையும் சேர்த்து அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள இணையவழி பாதுகாப்பு யோசனையை எதிர்த்து இதுவரை உயர் நீதிமன்றத்தில் நான்கு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சோசலிச இளைஞர் சங்கத்தினர், சமூக ஆர்வலர் தரிந்து உடுவரகெதர மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, சுதந்திர மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஜி.எல். பீரிஸ் ஆகியோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த உத்தேச யோசனை, அக்டோபர் 03 அன்று பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
