சனத் நிஷாந்தவுக்கு எதிராக மனு தாக்கல்-செய்திகளின் தொகுப்பு
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு அவருக்கு தண்டனை வழங்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிச் சேவைகள் சங்கத்தினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கடந்த ஆகஸ்ட் 23 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இராஜாங்க அமைச்சர் சனத் சனத் நிஷாந்த வெளியிட்ட கருத்தின் மூலம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த கருத்தின் மூலம், நீதவானுக்கு உரிய அதிகாரத்தை அவர் சவாலுக்கு உட்படுத்தியுள்ளதாகவும் நீதிமன்றத்தின் கௌரவத்தை உதாசீனம் செய்துள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடானது அரசியலமைப்பின் 105 ஆம் சரத்தின் கீழ் குற்றமாகும் என நீதிச் சேவைகள் சங்கம் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam