தேர்தல்கள் ஆணையகத்துக்கு எதிராக மனுத்தாக்கல் செய்த அசேன் சேனாரத்ன
தனது சுயேச்சைக் குழுவின் வேட்புமனுவை நிராகரித்த இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானத்தை எதிர்த்து சமூக ஊடக பதிவாளர் அசேன் சேனாரத்ன, உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
குறித்த மனுவானது நேற்று(16.10.2024) உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, சுயேட்சைக்குழுவின் நியமனப் பத்திரங்கள் அங்கீகரிக்கப்படாத ஒருவரால் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறி, அசேன் சேனாரத்னவின் வேட்புமனுவை தேர்தல் ஆணையகம் தகுதி நீக்கம் செய்தது.
அசேன் சேனாரத்ன
இதனையடுத்து சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில், சேனாரத்ன, இது தொடர்பில் தமது விரக்தியை வெளிப்படுத்தியிருந்தார்.
வேட்புமனுவை தாக்கல் செய்ய சென்றபோது, தம்மை வெளியில் காத்திருக்குமாறு கேட்டுக் கொண்டதால், மற்றொரு வேட்பாளர் மூலம் தமது குழுவின் ஆவணங்களை ஆணையகத்தில் சமர்ப்பித்ததாக அசேன் சேனாரத்ன தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
வேட்பு மனுக்கள் தகுதி நீக்கம்
எனினும் குறிப்பிட்டவர்களால் மாத்திரமே வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற விதியின்படி, குறித்த குழுவின் வேட்பு மனுக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையகம் காரணம் கூறியிருந்தது.
இந்தநிலையில் அசேன் தாக்கல் செய்த மனு, அடுத்த வார ஆரம்பத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |