தெஹிவளை கடற்கரையோர விருந்தகத்தை தகர்த்தமைக்கு எதிராக மனுதாக்கல்
நீதி என்ற யுக்திய நடவடிக்கையின் ஒரு பகுதியாக போதைப்பொருள் தலைவர்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி, தெஹிவளை கடற்கரையோர விருந்தகத்தை தகர்த்தமைக்கு எதிராக சோல் பீச் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம், இலங்கையின் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளது.
பீச் ஹோட்டலின் இயக்குநர்கள் மற்றும் பங்குதாரர்கள் பொலிஸ் மற்றும் கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மைத் துறையினர், தங்கள் வணிக வளாகங்களை இடித்து அழித்ததையும், அதைத் தொடர்ந்து விருந்தகத்தின் பங்குதாரரை கைது செய்து பொலிஸில் வைத்திருப்பதையும் இந்த மனுவின் மூலம் சவாலுக்கு உட்படுத்தியுள்ளனர்.
எனவே, தமது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தேசிய பொலிஸ் ஆணையகத்திற்கு உத்தரவிடுமாறு மனுதாரர்கள் மனுவில் கோரியுள்ளனர்.
250 மில்லியன் முதலீடு
மனுதாரர்களான சந்தன சம்பத், அப்துல் காதர் முஹம்மது ரிஃபா மற்றும் பாரிஸ் முகமது இக் ஆகியோர் கூட்டாக, இந்த வணிகத்தில் 250 மில்லியன் மற்றும் முதலீடு செய்யப்பட்ட அனைத்து பணங்களும் சட்டப்பூரவமானவை என்று குறிப்பிட்டுள்ளனர்.
தங்கள் நிறுவனத்தில் தற்போது சமையல் துறை, கணக்குகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம், உணவு மற்றும் குளிர்பானம், செயல்பாடு மற்றும் வீட்டு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 92 பேர் பணிபுரிவதாக மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர்.
வணிக வளாகத்தின் ஒரு அங்கமாக விளங்கும் இலக்கம் 44, கெம்பல் பிளேஸ், தெஹிவளை, கொழும்பு ஆகிய காணி, இலங்கை தொடருந்து திணைக்களத்துக்கு சொந்தமானது. இந்த நிலத்தை தொடருந்து திணைக்களம்,பின்னர் பிரபாத் என்ற ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கியது.
இந்த நிலையில் இரண்டாவது மனுதாரருக்கு புதிய உணவகம் மற்றும் மதுக்கடை திறக்க பிரபாத் என்பவரே அந்தக்காணியை வழங்கியதாக மனுதாரர்கள் குறிப்பிடுகின்றனர்.
குத்தகை வாடகை
அதன்படி, இரண்டாவது மனுதாரர், 2023 முதல் 2028 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கான குத்தகை வாடகையை இலங்கை தொடருந்து திணைக்களத்துக்கு செலுத்துவதற்கு உடன்பட்டுள்ளார்.
அதன்படி, இரண்டாவது மனுதாரர் 2,553,000 ரூபாயை இலங்கை தொடருந்து திணைக்களத்திற்கு ஏ.ஏ பி பிரபாத் என்ற பெயரில் செலுத்தியுள்ளார்.
எனினும் 2014 ஜனவரி 01ஆம் திகதி அன்று, முற்பகல் 9.30 மணியளவில் தொடருந்துப் பகுதி பொறியாளர் மற்றும் உதவி இயக்குனருடன் 100 க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் நான்கு பேக்ஹோக்கள் மற்றும் தொழிலாளர்கள் குழுவுடன் அங்கு வந்து, மனுதாரரின் வணிக வளாகத்தை அழித்ததாக மனுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் மனுதாரர்கள் தமது மனுவில் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் பலரை பிரதிவாதிகளாக மனுதாரர்கள் பெயரிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 20 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி... யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தது? Manithan
