பொருட்களை பெற்று கொண்டு பணம் கொடுக்காத பீற்றர் இளஞ்செழியன் - நீதிமன்றை நாடவுள்ள பாதிக்கப்பட்ட நபர்
தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர், கட்சியின் இளைஞர் அணி பிரமுகர், சமூக செயற்பாட்டாளர் என தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் முல்லைத்தீவினை சேர்ந்த பீற்றர் இளஞ்செழியன் என்பவர் கடந்த வருடம் மார்ச் மாதம் 24ஆம் திகதி புதுக்குடியிருப்பு நகரில் உள்ள புத்தக கடை ஒன்றில் 4 இலட்சத்து 51 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை பெற்றுக் கொண்டு இதுவரை பணம் செலுத்தவில்லை என புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து குறித்த வழக்கு இணக்கசபைக்கு விடுக்கப்பட்டுள்ளது.
இணக்கசபையினால் அழைப்பாணை அனுப்பப்பட்டும், கிராம உத்தியோகத்தர் ஊடாக அறிவித்தும் எந்த ஒரு தவணைக்கும் சமூகம் தராத காரணத்தினால் இணக்கசபையினால் குறித்த பணப்பிணக்கு தீர்த்து வைக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட வணிக நிலை உரிமையாளர் நீதிமன்றத்தனை நாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழரசு கட்சியின் தனது பதவி நிலையினை சொன்னதன் காரணத்திலேயே குறித்த நபருக்கு இவ்வளவு பெறுமதியான பொருட்களை கடனாக வழங்கியுள்ளதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.