பலத்த எதிர்பார்ப்பில் தமிழக தேர்தல்: விஜய்க்கு எதிராக கிளம்பும் புதிய சர்ச்சை - பறந்தது கடிதம்
தேர்தல் நிலவரம் பலத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு விலங்கு நல அமைப்பான பீட்டா கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
அவரது தேர்தல் பிரசாரத்தின் போது கட்சியின் நிறங்கள் பூசப்பட்ட புறாக்கள் பறக்கவிடப்பட்டுள்ளமைக்கு கண்டனம் தெரிவித்து இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
உயிருள்ள பறவைகள் மீது இவ்வாறு சாயம் பூசுவது கடும் கண்டனத்திற்குரியது என பீட்டா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
அறிவுறுத்தல்
புறாக்கள் மீது சாயம் பூசுவது அவற்றின் இறக்கைகள் மற்றும் தோலில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இது போன்ற செயல்கள் விலங்கு சித்திரவதை சட்டத்தின் கீழ் வரும் என்பதால், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இது குறித்து உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் விலங்குகள் மற்றும் பறவைகளுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையிலான செயற்பாடுகளைத் தவிர்க்க அக்கட்சி முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.